[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007]
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைக் கொன்றுவிட்டதாகக் கொக்கரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் அதற்கான விளைவுகளை விரைவில் உணரும் என தமிழீழ கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகளின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைக் கொன்றுவிட்டதாகக் கொக்கரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் நிட்சயம் அதற்கான விளைவை அனுபவித்தே தீரும்.
24 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து இன்று மீளாத்துயில் கொள்ளும் உத்தம மாவீரனின் நினைவு, தமிழீழத்தில் மட்டும் இன்றி உலகப் பரப்பில் வாழும் தமிழ் மக்களுக்கு பேரடியாக செய்தி.
எனினும் இந்த மாவீரனின் விடுதலை வீச்சை அனைத்து தமிழீழ மக்களும் விரைவுபடுத்த வேண்டும் என கேணல் சூசை அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.