பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்த சிறிலங்காவுக்கு தக்க பதிலடியை நிச்சயம் எமது தேசியத் தலைவர் தருவார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளின் வீரவணக்க நிகழ்வில் சீ.புலித்தேவன் ஆற்றிய உரை:
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் இழப்பு என்பது எமது விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எமது விடுதலை இயக்கத்துக்கும் மக்களுக்கும் இது புதியதான ஒன்றல்ல.
1987 ஆம் ஆண்டு எங்கள் மூத்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இழந்தோம்.
அந்தப் பேரிழப்பின் பின்னர் எமது தேசியத்தலைவர் இந்தியப் படைகளை எதிர்கொண்டு மிகப்பெரும் போரை நடத்தியிருந்தார். பன்னிரு வேங்கைகளின் இழப்பின் வேகத்துடன் உலகின் நான்காவது பெரும் படைகளுடனும் ஐந்தாவது பெரும் கடற்படையுடனும் நாங்கள் போரிட்டு வெற்றி பெற்றோம்.
பெருந்தளபதிகளின் இழப்பு எங்களை இந்தப்போரில் வெற்றி கொள்வதற்கான மனவலிமையையும் ஓர்மத்தையும் ஏற்படுத்தியது.
அதைப்போலவே தான் எமது அரசியால்துறைப் பொறுப்பாளரையும் இப்போது இழந்திருக்கறோம்.
இத்தாக்குதலில் சிக்கிய எங்கள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணாவையும் ஏனையவர்களையும் காப்பாற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்தோம்.
ஆனாலும் எங்கள் முயற்சிகள் கைகூடவில்லை. இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் அனைவரும் விடுதலையின் பால் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். அவர்களின் பக்கங்கள் அனைத்தையும் வெளியில் கூறிவிட முடியாது. எங்கள் மக்களின் விடுதலைக்காக தமிழீழத்தில் எதிரிகளுடன் போரிட்டும் ஒருபுறம் வெற்றிகளைச் சாதித்தாலும் மறுபுறம் அனைத்துலகம் வரை எங்களின் உரிமைகளை தட்டிக்கேட்டவர்கள் அவர்கள்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை அனைத்துலக நாடுகள் பலவற்றிடம் எடுத்துக்கூறி எங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். அதற்காக தென்னாபிரிக்கா முதல் அனைத்து பல்வேறு நாடுகளுக்கும் அவர் சென்றிருந்தார்.
எங்கள் போராட்டத்தின் நியாயத்தையும் சிங்கள அரசால் இழைக்கப்படுகிற கொடுமைகளை வெளிப்படுத்தவும் கால நேரமில்லாமல் உழைத்தார்கள். அனைத்துலக நாடுகளுக்கு நாங்கள் சென்றிருந்த காலப்பகுதியில் ஓய்வின்றி பல்வேறு அனைத்துலக நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து எங்கள் நியாயங்களை வெளிப்படுத்தினார்கள்.
நாங்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்கள் அனைத்தையும் சரியாகப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்கள் கடுமையாக பணிபுரிந்திருந்தனர். அவர்களது அத்தகைய அயராத பணி எங்கள் போராட்டத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
அரசியல்துறைப் பொறுப்பாளரின் பணியில் இரண்டு பக்கங்கள் இருந்தன. அரசியல் பக்கங்களைப்போல படையணிப் பங்களிப்பும் இருந்தது. அரசியல்துறைப் பொறுப்பாளரின் தலைமையின் கீழ் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு எப்போதும் ஒரு படையணி இருந்தது. அந்தப் படையணி எப்போதும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும். பிரிகேடியர் தமிழச்செல்வன், அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக இருந்தார். அதன்பின்னர் யாழ். மாவட்டத் தளபதியாகவும் இருந்தார்.
இந்தியப் படைகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியவர்
தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கு நீண்ட பின்னணி இருக்கிறது. இந்திய இராணுவ காலத்தில் இந்தியப் படைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை நடத்தி பேரிழப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணாவை ஆயிரக்கணக்கான இந்தியப் படைகள் தேடி அலைந்தனர்.
இந்தியப் படைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நின்று பிடித்து எதிரிக்கு பேரிழப்பை ஏற்படுத்திய சலிக்காத போராளியாக செயற்பட்டார். திலீபன் அண்ணாவின் நினைவு நாள் ஒன்றில் இந்தியப்படைகள் சில நாட்கள் போர் நிறுத்தம் செய்திருந்தனர். இந்த அமைதிக் காலத்தில் தமிழ்ச்செல்வன் அண்ணா, ஒரு அணியுடன் வீதியால் சென்று கொண்டிருந்த போது இந்தியப் படைகள் திடீரென வந்து வழிமறித்துக்கொள்ள இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. உடனடியாக இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தவேண்டாம் உங்களுடன் கதைக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.
அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க இரண்டு தரப்பும் ஒரு தீர்மானத்தின் படி சந்தித்துக்கொள்கின்றனர். அப்போது அந்த இந்தியப்படை அதிகாரி தினேசைச் சந்திக்க வேண்டும் என்று கேட்கின்றனர். அதற்கு இவர் அவரைச் சந்திக்க முடியாது அவர் நூற்றுக்கணக்கான போராளிகளுடன் வேறு ஒரிடத்தில் இருக்கிறார் என்று கூறினார். எதுவானாலும் எங்களுக்கு கூறுங்கள் நாங்கள் அவருக்குச் சொல்கிறோம் என்று தெரிவித்தார். அந்த இந்தியப்படை அதிகாரிக்கு தான் கதைத்துக் கொண்டிருப்பதுதான் தினேஸ் என்பதை அறியாது, தினேஸ் சிறந்த வீரர்- அவரின் திறமை எங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறி தமிழ்ச்செல்வன் அண்ணாவின் போரியல் திறமைகளைப் பாராட்டிக்கொண்டிருந்தார். அந்த அளவுக்குச் சிறந்த தளபதியாக செயற்பட்டிருந்தார்.
அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு எப்படித்திறமை இருந்ததோ அதனைப்போல அவருக்கு போரில் தனித்திறமை இருந்தது.
மக்களின் அடிப்படைப் பிரச்சிணைகளைக் கவனிப்பது முதல் இராஜதந்திரிகளைக் கையாள்வது வரை அவருக்கு தனித்திறமை இருந்தது. மக்களின் பிரச்சினைகள் எதுவானாலும் சரி அவற்றை இனங்கண்டு தீர்வு காண்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
ஆழிப்பேரலை என்றாலும் சரி புயல் வெள்ளம் என்றாலும் சரி அனைத்திற்கும் தீர்வு தமிழ்ச்செல்வன் அண்ணாதான். மக்களின் தேவைகளுக்காக தனது உடைமைகளைக் கூட அனுப்பிவிடும் ஒரு புனிதமான மனிதன்.
அத்தகைய பெரு மனிமதனை இழந்தது எமக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பு. அண்மை நாட்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களால் சிங்கள அரசு தினறிக்கொண்டிருக்கிறது. அநுராதபுரம் என்றாலும் சரி அதற்குப்பின்னர் மன்னார் என்றாலும் சரி அவர்கள் பேரிழப்புக்களையே சந்தித்திருக்கின்றரன். இந்த இராணுவ ரீதியான இழப்புக்களால் அரசு கோழைத்தனமான முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருகின்றது. அரசியல்துறைப் பொறுப்பாளர் தாக்குதலுக்குள்ளான இடம் அனைத்துலக சமூகத்துடன் பேச்சுக்களை மேற்கொள்ளும் தனிப்பட்ட அலுவலகம்.
கோத்தபாய ராஜபக்ச தான் இன்றுதான் மகிழ்வாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்த இழப்பிற்கு தக்க பதிலடியை எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் நிச்சயம் கொடுத்தே தீருவார். அவர்களின் இழப்பு ஒட்டு மொத்த தமிழர்களையும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக எழுப்பிவிட்டுள்ளது. நிச்சயம் நாங்கள் தமிழீழத்தை அடைவோம் என்றார் அவர்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.