Sunday, November 04, 2007

கிராமங்கள் தோறும் மக்களின் வணக்கத்துக்கு பிரிகேடியரின் வித்துடல்

[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் வன்னியில் கிராமங்கள் தோறும் மக்களின் வணக்கத்துக்கு வைக்கப்பட்டு வருகின்றது. பெருமளவில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க தமது வணக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

ஒட்டுசுட்டான்- மாங்குளம்- மல்லாவி வெள்ளாங்குளம் பகுதிகளுக்கு வித்துடல் இன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

மல்லாவி மாவீரர் மண்டபத்தில் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் துணைப்பொறுப்பாளர் தங்கன் ஏற்ற, மலர்மாலையைச் சூடி ஈகச்சுடரினை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் ஏற்றினார்.

மலர்மாலைகளை அரசியல்துறைப் போராளி பாப்பா, தளபதி கேணல் பால்ராஜ், மருத்துவப் பிரிவு களஞ்சியப் பொறுப்பாளர் மனோச், மல்லாவி மத்திய கல்லூரி முதல்வர் ஜேசுதானந்தன் ஆகியோர் உள்ளிட்ட பலர் சூட்டினர். தளபதி கேணல் பால்ராஜ், பாப்பா, முதல்வர் ஜேசுதானந்தன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.