[புதன்கிழமை, 07 நவம்பர் 2007] யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை பாரியளவில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாரிய அளவிலான திட்டமிடலுடன் இன்று புதன்கிழமை காலை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும், பீரங்கி பொருத்தப்பட்ட உலங்குவானூர்திகளின் தாக்குதல் ஒத்துழைப்புடனும் படையினர் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரங்கப் பகுதியில் இருந்து பல முனைகளில் பாரியளவில் முன்நகர்வை மேற்கொண்டனர். அதிகாலை 5:00 மணிமுதல் படையினர் மேற்கொண்ட இம் முன்நகர்வு காலை 8:00 மணிவரை நீடித்தது. படையினரின் இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலையடுத்து படையினர் 8:00 மணியளவில் பாரிய இழப்புக்களுடன் அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இம் முன்நகர்வில் சிறிலங்காப் படைக் கொமாண்டோக்கள் பாரிய திட்டமிடலுடன் ஈடுபட்டனர். படைத்தரப்பினருக்கு பாரிய இழப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட தடவைகள் கிளாலி மற்றும் முகமாலை பின்தளங்களில் இருந்து துருப்புக்காவி உலங்கு வானூர்திகள் மூலம் காயமடைந்தவர்கள் பலாலி படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் படைத்தரப்பினரின் போர்க்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனன.
Wednesday, November 07, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.