[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007] சிறிலங்கா வான் படையின் வான் குண்டுத்தாக்குதலினால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட செய்தி அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், தளபதி சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், வன்னி நிலப்பரப்பில் சிங்கள அரசு நிகழ்த்திய வான் குண்டுவீச்சுக்கு இலக்காகி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார் என்ற செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. நம்ப முடியவில்லையென்றாலும், செய்திகள் நம்ப வைத்து விட்டன. தமிழீழத் தேசத்தின் விடுதலைக்கு மேலும் மிக உயர்ந்த தியாகம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. அவருடன் இன்னும் ஐந்து விடுதலைப் புலிகள் மடிந்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒப்பற்ற இத்தியாகத்தை ஈர்ந்துள்ளமைக்காக, எம் வீரவணக்கத்தைச் செலுத்தி நிற்கின்றோம். இந்த அளப்பரிய தியாகத்தினால் இன்னும் ஆயிரமாயிரம் தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். தமிழீழ விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிப்பார்கள் என்பது உறுதி. ஆனால் சிங்கள அரசின் இச்செய்கையின் பின்விளைவுகள் பாரதூரமானதாய் இருக்கப் போகின்றது. தமிழீழத் தேசபக்தர்களும், விடுதலை விரும்பிகளும் அமைதியாகத் தங்கள் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது சம்பந்தமான விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
Friday, November 02, 2007
ஆயிரமாயிரம் தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Friday, November 02, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.