[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு சேலத்தில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. சேலம் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் இரா. அருள், பெரியார் திராவிடர் கழகத்தின் முல்லைவேந்தன், தமிழக இளைஞர் முன்னணியின் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மனித உரிமை இயக்கத்தின் பூமொழி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின்பா. கந்தசாமி, தமிழர் தேசிய இயக்கத்தின் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் இனியன், சட்டக்கல்லூரி மாணவர் சீனிவாசராவ், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ஆனையப்பன், குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, புதியன பண்பாட்டு இயக்கத்தின் மா. செந்தில், பொடா சிறையாளி பாலன், "முகடு" சரவணன் உள்ளிட்டோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் மேட்டூரில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேட்டூர் மாதா கோவிலில் அமைதி ஊர்வலம் புறப்பட்டது. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் திருவுருவப் படங்களை தாங்கியபடி மேட்டூர் பேரூந்து நிலையத்தை ஊர்வலம் வந்தடைந்தது திமுக இளைஞரணிச் செயலாளர் பாலு, பாட்டாளி மக்கள் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் சுகுமார், திமுக முன்னாள் நகர் மன்றத் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோ தலைமையில் இன்று பிற்பகல் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு சிற்றுர்கள், நகரங்களில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு உணர்வுப்பூர்வமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
Sunday, November 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.