[வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2007] பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். இவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்களால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது பற்றிக் கருத்துக்கூறிய பிரித்தானிய உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர், முரளிதரன் போர்க்குற்றம் புரிந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவரது அகதி விண்ணப்பத்தை நிராகரித்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார். சிறுவர்களைக் கடத்தி படையில் இணைத்தமை, படுகொலை, கடத்தல்கள் போன்ற முரளிதரனின் போர்க்குற்றம் தொடர்பான விபரங்களை தந்து உதவுமாறு நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கருணா என்ற முரளிதரனுக்கு இராசதந்திரிக்கான கடவுச்சீட்டை வழங்கியுள்ள சிறீலங்கா அரசு, இராசதந்திரி என்ற போர்வையில் அவரை வெளியே எடுத்து கொழும்பிற்கு அழைத்துச் செல்வதற்கு மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.
Friday, November 09, 2007
போர்க்குற்றம் புரிந்தவர் அகதி அந்தஸ்து கோருவது கடினம் - பிரித்தானிய உள்துறை அமைச்சு
Friday, November 09, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.