[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007] சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் கொழும்பில் உள்ள வீட்டில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் இருபதுக்கும் அதிகமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்சவை மீண்டும் ஆளும் தரப்பிற்குள் இழுத்துக்கொள்ள அமைச்சர்கள் இருவர் பகீரத முயற்சிகளை செய்துவரும் நிலையில் அவரது வீட்டில் ஏராளமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டொபுள்ளேயும் பிரதி நிதியமைச்சர் டிலான் பெரெராவும் விஜயதாச ராஜபக்சவின் வீட்டிலேயே நேற்று பிற்பகல் முதல் இரவு வரை இருந்துள்ளனர் என்றும் அவர்கள் விஜயதாச ராஜபக்சவை மீண்டும் ஆளுந்தரப்பிற்குள் இழுக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயதாச ராஜபக்சவின் வீட்டிற்கு ஊடகவியலாளர்கள் நேற்று சென்றனர். எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அவரது வீட்டுக்கு ஊடகவியலாளர் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.