Wednesday, November 28, 2007

கொழும்பு புறநகரில் குண்டுவெடிப்பு- 18 பேராக அதிகரிப்பு- 40 பேர் காயம்- 5 பேர் கவலைக்கிடம்.!!

[புதன்கிழமை, 28 நவம்பர் 2007]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தோரில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கொழும்பு புறநகரான நுகெகொடவில் உள்ள பிரபல ஆடையகமான நோலிமிட்டின் பொதிகள் காப்பகத்தில் இன்று புதன்கிழமை மாலை 5:45 மணிக்கு ஆண் ஒருவர் ஒரு பொதியை கொடுத்துவிட்டு கடையின் உள்ளே சென்றுள்ளார்.

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து கடைக்கு வெளியே வந்த அந்நபர் பொதிகள் காப்பகத்தில் கொடுத்த தனது பொதியை வாங்காது சென்றுள்ளார்.




அங்கு நின்ற பொதிகள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பொதியை வாங்கிச் செல்லுமாறு கோரிய போதும் அவர் அதனை வாங்காது சென்றுவிட்டார்.

இது குறித்து அப்பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், அப்பொதியை பிரிக்க முயற்சித்தார். அப்போது அப்பொதியில் இருந்த குண்டு சிதறியுள்ளது.

இதில் 18 பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பகுதியில் பாரிய புகை மற்றும் தீயுடன் குண்டுவெடித்ததாகவும் கட்டடம் நாசமடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டு வெடிப்பில் அங்கிருந்த பல கடைகள் தீப்பற்றி எரிந்தன. சில கட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளிகளும் வீதியால் சென்ற வாகனங்கள் சிலவும் இத்தாக்குதலை அடுத்து தீப்பற்றிக்கொண்டன.

கோட்டை மற்றும் மாநகர சபைக்குரிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் சுமார் அரை மணிநேரத்திற்குப் பின்னரே அவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்ககுள் கொண்டுவர முடிந்தது.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் அப்பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் காத்துநின்ற பொதுமக்கள் என்று நுகேகொட சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு மேலதிக மருத்துவர்களும் அனுப்பட்டடிருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஐந்து பேரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியிருப்பதாக அம் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் 5 பேரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து நுகேகொடவிற்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. நுகேகொட ஊடாக பயணிக்கும் மக்களை வேறு பகுதிகளின் ஊடாக பயணிக்குமாறு சிறிலங்கா காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும், காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்ட்டுளளனர். வீதிகளில் கடும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சிறிலங்காவில் அரச தலைவர் இல்லாததால் இச்சம்பவத்தை அடுத்து எடுக்கவுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஒன்று நடைபெறுவதாகத் தெரியவருகிறது.

நுகேகொட கொழும்பு நகரிலிருந்து தென்கிழக்கில் 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மிரிகன காவல்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

இதனிடையே மஹரகம நாவின்ன பகுதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் குண்டு காணப்படுவதாகவும் அதனை செயலிக்க வைக்கும் பிரிவினர் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் நாளை முதல் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலைகளை இரண்டு நாட்களுக்கு மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கிறது.

9 comments:

  1. படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவருள் ஒருவர் தற்போது இறந்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தள்ளது.

    ஜானா

    ReplyDelete
  2. எனக்கு என்னவோ இது இந்தியாவின் வேலை போல் படுகிறது. ஒரு கல்லில இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு தழிழ் நாட்டில இருக்கிற தழிழர்களை அடக்கிகொண்டு தமிழீழத்தில புலிகளின் நியாயத்தை அநியாயமாக காட்டுவதற்கு முற்படுகிறார்கள் போல் உள்ளது. அநேகமாக வெளிநாடுகள் இந்த குண்டு வெடிப்புகளை கண்டிப்பார்கள். புலிகள் அதற்கு முதல் இதை மறுக்கவேண்டும் சில அதாரங்களை முன்வைத்து. இல்லாவிடில் திரும்பவும் புளியமரத்தில் வேதாளம் ஏறிவிடும்.

    ReplyDelete
  3. எடுத்த எடுப்பில் உடனே அறிக்கை விடுவது தற்கொலைத்தாக்குதல் என்பது சிங்கள தரப்புக்கு பழகிப்போய் விட்டது. இப்பொது என்னவென்றால் பாசலை விரித்த போது நடந்த விவகாரமாம். ஜேவிபி அண்ணாச்சிமார் இதுவரை சகோதரர் குருதியில் கையை நனைத்ததே இல்லைத்தானே. அதுதான் அரசியல் இனிமேல் சூடு பிடிக்கபோகிறது.


    --------------------

    உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

    ReplyDelete
  4. புலிகள் மறுத்தால் மட்டும் நம்பி விடுவார்களா? இந்தக் கோதாரிச் சர்வதேச சமூகத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நம் வேலையைப் பார்க்க வேண்டியது தான். அவர்களிடம் எடுக்கும் நல்ல பெயர் நாக்கு வழிக்கத் தான் உதவப் போகிறது. யுத்தம் தேவையென்ற சிங்கள மக்கள் அதை ருசி பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள் இப்போது.

    ReplyDelete
  5. பள்ளிக்கூட பிள்ளைகள் பிரயாணம் செய்த பேரூந்துக்கு ஆழஊடுருவும் படையினர் கிளைமோர் வைக்கலாம். அது தப்பில்லை. . இதை புலிகள் செய்தால் தப்பா? பொதுமக்கள் மீது நீங்கள் செய்தால் தப்பில்லை புலிகள் செய்தால் தப்பா? நேற்றுவரை நான் புலிகளை திட்டிக்கொண்டிருந்தேன். இதை புலிகள் செய்திருந்தால் அவர்களை நான் வாழ்த்துவேன்.
    15 பள்ளி சிறுவர்களை கொன்றொழித்தனர். யார் கேட்டனர். .தை யார் செய்திருந்தாலும் ஆவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    நீங்கள் பாய்ந்தால் நாங்களும் பாய்வோம்.

    வன்னியன்.

    ReplyDelete
  6. பொதுமக்கள் இழப்பென்பது போரின் விதிகளுக்கு முரணானதுதான் ! அனாலும் எமது மக்கள் கொன்று குவிக்கப்படுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அடிக்கு அடி ! வேறு மருந்தில்லை ! இனி எங்களின் மேல் கை வைக்குமுன்னர் யோசிப்பார்கள்!

    எமது மக்களை கும்பல் கும்பலாக கொல்லும்போது இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். யாருக்கு வேண்டும் சர்வதேச அபிப்பிராயம் ? சர்வதேசத்திற்கு எமது மக்களின் அழிவு தெரியவில்லை என்றால், இந்தச் சிங்களவர்களின் மரணம் பற்றியும் வாய் திறக்கக் கூடாது !

    Ragunathan

    ReplyDelete
  7. இது முடிவல்ல ஆரம்பம் என்றால் நன்றாக இருக்கும் வன்னியில் கிபீர் குண்டு வீசினால் அதன் வலி கொழும்பில் தெரியவவேணும்.
    தமிழன் மீது தாக்கினால் ஒன்றுமில்லையா? மோடய மக்களுக்கு ஏதாவது என்றால்தான் வலிக்குதா.
    முற்பகல் செய்தால் பிற்பகல் சீ சீ உடனேயே விளைய வைக்கவேண்டும்.

    வன்னியன்.

    ReplyDelete
  8. all these times you proud ltters were claiming that ltte doesn't target civilians..what happened now?
    cannot handle to heat of SLAF?
    let the show begin...

    ReplyDelete
  9. பழிபோட்டால் உடனடியாக மறுப்பு சொல்ல வேண்டும் ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும், கொழும்பில் படுத்துறங்க்கும் சர்வதேச நடுவர்கள் தூக்கம் கலந்து வடக்கு கிழக்கில் நடக்கும் கொலைகளை நேரில் சென்று பார்க்கவேண்டும். யாருடைய பயமுறுத்தலும் இனி எங்களை ஒன்றும் செய்யாது, எமக்கென்று ஒரு விதி செய்து கொண்டோம் அதை எந்த நாளும் காப்போம். இழப்பதற்க்கு தமிழனிடம் உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.