Saturday, November 03, 2007

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிப் படையிலிருந்து 108 சிறிலங்கா படையினர் நீக்கம்

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007] பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமைதிப் படையில் இடம்பெற்றிருந்த 950 சிறிலங்காப் படையினரில் 108 பேரை சிறிலங்காவுக்கு ஐ.நா. திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மொண்டஸ் கூறியதாவது: ஹெய்ட்டியில் அமைதிப் படையில் இடம்பெற்றிருந்தோர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசாங்கமும் மிகவும் கவலையடைகிறது. வயது குறைந்த சிறுமிகளுக்கு பணம் கொடுத்த இக்கொடூர செயலை சிறிலங்கா படையினர் செய்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக 108 சிறிலங்கா படையினர் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா தெரிவித்துள்ளது சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு ஐ.நா. உதவும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.