[வியாழக்கிழமை, 4 ஒக்ரொபர் 2007] சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஊடகவியலாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையம் உத்தரவிட்டுள்ளது. "தேசப் பொறுப்புள்ள பணிகளில் மிகத் தீவிரமாக" கோத்தபாய ஈடுபட்டுள்ளமையால் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான சந்தேகங்களுக்கு அவரைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தையோ அல்லது கோத்தபாயவுடன் தொடர்புகளை ஏற்படுத்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மைய இயக்குநரையோ தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஊடக மைய இயக்குநர் லக்ஸ்மன் கூல்கலே தெரிவித்துள்ளார்.
Thursday, October 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.