Tuesday, October 09, 2007

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளுக்கு தூபமிடும் சதி - அமைச்சர் அமீர் அலி.!!

[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007] தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளுக்கு தூபமிடும் சதி முயற்சியில், சிறீலங்கா அமைச்சர் அமீர் அலி ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு வாகரை நாவலடிப் பகுதியில் உள்ள பூர்வீக தமிழ் காணிகள், சிறீலங்கா மீள்குடியேற்ற அமைச்சர் அமீர் அலியின் நேரடி மேற்பார்வையின் கீழ் கபளீகரம் செய்யப்பட்டு, தற்பொழுது அங்கு முஸ்லிம் குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், யுத்த முன்னெடுப்புக்களாலும், கடற்கோள் காரணமாகவும் குடியிருப்புக்களை இழந்த வாகரை பிரதேச தமிழ் மக்களுக்கென, நாவலடிப் பகுதியில் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு, அமெரிக்கன் மி~ன் நிறுவனம் மேற்கொண்ட முயற்சி, சிறீலங்கா படைகளாலும், அமைச்சர் அமீர் அலியாலும் திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாவலடியை அண்டியுள்ள ஆலங்குளம் பகுதியில், ஏதிலிகளாக நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தங்கியுள்ளன. இதனிடையே, நாவலடிப் பகுதியில் உள்ள பூர்வீக தமிழ் காணிகளை கபளீகரம் செய்திருக்கும் முஸ்லிம் குடியேற்றவாசிகளுக்கு, ஏற்கனவே வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் வீடுகளும், காணிகளும் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. சிறீலங்கா அமைச்சர் அமீர் அலியின் மதவெறிப் போக்கால் தூண்டப்பட்டு, முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் அனுசரணையுடனும், படையினரின் பாதுகாப்புடனும், பூர்வீக தமிழ் காணிகளை இவர்கள் கபளீகரம் செய்திருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து கருத்துரைத்திருக்கும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, திட்டமிட்ட வகையில் நாவலடியில் இவ்வாறான நில சுவீகரிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், ஏற்கனவே இதேபாணியில் வாழைச்சேனை மீராவோடை பகுதியில் உள்ள பல பூர்வீக தமிழ் காணிகள், கபளீகரம் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.