[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். 1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன் 2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன் 3. லெப். கேணல் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், ஆறுமுகம் மகாதேவன் எண் 102-1 முரசுமோட்டை பரந்தனை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தயாசீலன் 4. கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா 5. கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன் 6. மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன் 7. மேஜர் இளம்புலி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கவிதா இரணைப்பாலை புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட துரைரட்ணம் கலைராஜ் 8. மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன் 9. கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார் 10. கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன் 11. மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன் 12. கப்டன் புலிமன்னன என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார் 13. கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார் 14. கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ் 15. கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ் 16. லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் 17. கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன் 18. மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி 19. கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி 20. கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா 21. கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
Tuesday, October 23, 2007
"எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்
Tuesday, October 23, 2007
3 comments
Subscribe to:
Post Comments (Atom)
மாவீரர்களுக்கு இந்திய, தமிழக மக்களின் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதமிழ் நெஞ்சமெல்லாம் நிறைந்து ஈழவேள்விதன்னில் தீக்குளித்த வீரத்தமிழ்க் கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.
ReplyDeleteதமிழீழ தாயகத்தின் விடியலுக்காக,தானைத்தலைவனின் வழியில் போராடி வித்தாகிய வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்
ReplyDelete--------------------
நட்புடன்
கலைநேசன்