Wednesday, September 12, 2007

பழ.நெடுமாறன் உட்பட தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது.!

[புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007] (செய்தி இணைப்பு 2) நெடுமாறன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்ட அறிவிப்பை அடுத்து நெடுமாறன் உட்பட பேரணியில் கலந்துகொண்ட தமிழீழ உணர்வாளர்கள் அனைவரும் தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாகைபட்டினத்திலும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படகேறும் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழீழ உணர்வாளர்கள் அனைவரும் தமிழக காவல்துறையினரால் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மண்டபத்திற்கு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் மீது தமிழக அரசு எத்தகைய வழக்குகளைப் பதிவு செய்யப் போகின்றது என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழீழ உணர்வாளர்கள் அனைவரும் தனித் தனியாக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு அவர்களின் சுய விபரங்கள் திரட்டப்படுகின்றன. காவல்துறையினர் என்னைக் கைது செய்தாலும் நான் சிறையில் எனது உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்வேன் என பழ.நெடுமாறன் அவர்கள் அறிவித்துள்ளார். அத்துடன் தமிழீழ உணர்வாளர்கள் படகேறும் பயணப் போராட்டம் தொடரும் என பழ.நெடுமாறன் அவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் தமிழக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். படகேறும் போராட்டத்தில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் கைதின் போது காவல்துறையினருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு காவல்துறையின தள்ளுப்பட்டு மோதுண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டோரை சென்னையில் உள்ள ஆளும் நிர்வாகம் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது கைது செய்யப்பட்டவர்கள் மீது எவ்வகையான வழக்கைப் பதிவு செய்வது குறித்து சென்னை நிர்வாகம் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கைதில் வயோதிபர்கள், அன்னையர்கள், இளைஞர்கள் யுவதிகள் என வயது வேறுபாடின்றி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படாது வெளியில் இருக்கும் தமது தமிழீழ ஆதரவாளர்கள் யாழ் குடாநாட்டுக்கான உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்களை எடுத்து செல்லும் போராட்டதை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்படுகிறது. நன்றி:பதிவு

1 comment:

  1. தினமலர் என்ன சொல்கிறது? இதோ:
    "கடற்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கைது
    ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமில் உள்ள வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இயக்க பொது செயலாளர் பரந்தாமன் தலைமையில் 150 பேர் இலங்கை கொண்டு செல்ல உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் ஏதும் கொண்டு வராத நிலையிலும், இலங்கை செல்ல படகுகள் ஏதும் ஏற்பாடு செய்யாத நிலையிலும், தங்களை கைது செய்யக்கோரி போலீசாரை கேட்டுக்கொண்டனர். போலீசார் துறைமுக எல்லையில் போராட்டம் நடப்பதால் கடற்படை காவலர்களே பொறுப்பு என கூறினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடற்படை அலுவலகத்தில் இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் கடற்படை கமாண்டன்ட் முகர்ஜி, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பளரிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து 150 பேர் கைது செய்யப்பட்டனர்"



    கடவுளே! தமிழக பத்திரிகைத் தர்மத்தைக் காப்பாற்று!!!!

    புள்ளிராஜா

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.