Wednesday, August 22, 2007

முல்லையில் இன்றும் வான்குண்டுத் தாக்குதல்

[புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2007]


சிறிலங்கா வான் படையின் மிக் - 27 ரக வானூர்திகள் முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது இன்றும் வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கும் 7.50 மணிக்கும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலின் போது வீதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்திலிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

மக்கள் குடியிருப்புக்களிலும் குண்டின் சிதறல்கள் வீழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாம் பாதுகாப்புத் தேடிக்கொண்டதால் தாக்குதலிலிருந்து தப்பிக்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசின் இத்தாக்குதலானது மாணவர்களின் மனநிலையை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று முல்லைக் கல்விச் சமூகம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.