[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]
எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க்கப்பட்டமையினாலேயே தமக்கு கண்டி பெரஹெரவை கண்டுகளிக்க முடிந்தது என்று பாடாசலை மாணவர்கள் இதன்போது ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி இங்கு மேலும் கூறுகையில்:

.
விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்போம். எமது தாய்நாட்டை எமது தாயைபோன்று நாம் பாதுகாக்கவேண்டும். சிறப்பாக கல்வி கற்று நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்கள் உருவாகவேண்டும். அதற்கான அமைதியான சூழலை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று கூறினார்.
இதன்போது தமது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இங்கு மாணவர்கள் எடுத்துக்கூறியதுடன் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது தமது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இங்கு மாணவர்கள் எடுத்துக்கூறியதுடன் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் என்று ஒரு பயங்கரவாதி சொல்லுறார்! எல்லாம் காலம்!
ReplyDeleteபயங்கரத்தைத் தோற்றுவிப்பவர்களைத்தான் பயங்கரவாதிகளெனக் கூறவேண்டும். வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையின் சகலபாகங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளால் சூழப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? அடக்குமுறை ஆட்சியைக் கொண்டு நடத்தும் சிங்களப் பேரினவாத நடவடிக்கைகள்தானே.
ReplyDelete--------------------
இறைவன்
இதைத்தான் தமிழர்கள் சொல்கின்றோம் பயங்கரவாதிகளிடமிருந்து எம் நாடான தமிழீழத்தை மீட்போம்
ReplyDeleteஈழவன்
யாழ் களத்தின் செய்திகள் போலிருக்குது நான் போட்ட பதில் மேலிருக்கும் 3 இல் ஒன்றாக இருகின்றது ஆகவே திரும்ப பதியவில்லை
ReplyDelete