Tuesday, August 28, 2007

யுனிசெவ் அமைப்பிடம் ஒப்படைக்க கூட்டிவரப்பட்ட சிறுவர்கள் மீது தாண்டியடியில் தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை 9 ஆண்கள், 5 பெண்கள் யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக யுனிசெவ் அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று தாண்டியடியில் வைத்து பொறுப்பேற்பதற்கு இணங்கியிருந்தனர். தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டிருக்கும் அதேநேரம், இரவில் அவர்கள் அங்கிருப்பதில்லையென்பதால் அவ்வேளையில் இவர்களை அங்கு அழைத்து வந்து இன்று காலை அனைவரையும் யுனிசெவ்விடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் 14 சிறுவர்களையும் புலிகள் தாண்டியடிக்கு அழைத்து வந்த போதே அவர்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதலையடுத்து எல்லோரும் சிதறியோடியுள்ளனர். எனினும் எவருக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை.

2 comments:

  1. நான் நினைகின்றேன் இந்த தாக்குதலின் காரணம் இப்படியான ஒரு உத்தியோக பூர்வ ஒப்படைப்பை புலிகள் செய்தால் புலிகளின் கிழக்கு இருப்பை தென்னிலைங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் உத்தியோகபூர்வமாக தெரியவந்துவிடும் என்பதால் என

    ஈழவன்

    ReplyDelete
  2. யுனிசெப் காறரும் சிதறி ஓடினார்களா..??? ஓடியிருந்தால் மிகவும் சந்தோசம்.... இல்லை வரும் வளியிலா தாக்குதல் நடந்தது..? தமிழ் சிறுவர்களுக்கும் போராளிகளுக்கும் எதுவும் நடந்து இருக்க கூடாது..

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.