[புதன்கிழமை, 6 யூன் 2007]
இன்று காலை 9.30 மணிக்கு தமிழர் தாயகத்தில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் உணர்பூர்வமாக ஆரம்பமாகின. மாணவர் எழுச்சி நாளுடன் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 33 ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள் அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றன.
தமிழீழ மாணவர் எழுச்சி நாளையொட்டி கிளிநொச்சியில் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. பேரணியானது கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி கிளிநொச்சி மத்தியகல்லூரி விளையாட்டரங்கில் நிறைவடைந்து.
பேரணியில் தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களினதும் மேஜர் முரளி அவர்களினதும் திருவுருவப் படங்களைத் தாக்கியவாறும் பேரணியில் ''எமது நிலம் எமக்கு வேண்டும்'' , ''எல்லோர்க்கும் நல்வாழ்வு தரும் நிம்மதியான கல்வியே எமக்கு வேண்டும்'' என்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணி நகர்ந்து சென்றது.
இதேநேரம் பேரணியில் ஆக்கிரமிப்பு குறியை சித்தரிக்கும் உருவமும் மாணவர்களினால் கொண்டு செல்லப்பட்டதோடு ஆக்கிரமிப்பு உருவம் மாணவர்களினால் தீயிட்டப்பட்டது.
Wednesday, June 06, 2007
தமிழர் தாயகத்தில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் உணர்வுபூர்மாக கடைப்பிடிப்பு.
Wednesday, June 06, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.