Tuesday, June 05, 2007

வன்னிப் பிராந்தியத்தின் மீது வான்குண்டுத் தாக்குதல்கள்.!!

[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007]


சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை வன்னிப் பிராந்தியத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

முதல் தாக்குதலை இன்று காலை 9.40 மணிக்கு மாங்குளம் சந்திப்பகுதியில் கிபீர் ரக வானூர்திகள் நடத்தின.

இத்தாக்குதலில் வணிக நிலையம் ஒன்று சேதமாகியுள்ளதுடன் குண்டுகளின் துண்டுகள் மாங்குளம் மகாவித்தியாலய வளாகத்திற்குள்ளும் மக்களின் வீடுகளுக்குள்ளும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதனால் பாடசாலை மாணவர்கள் மக்கள் சிதறி ஒடி பெரிதும் அவலப்பட்டனர். பாடசாலை மாணவர்கள் கத்தி அவலப்பட்டதுடன் சிதறி ஓடியதில் பலர் காயமடைந்தும் உள்ளனர். சிலர் உளரீதியாகப் பீதியடைந்தனர்.

மாங்குளம் பகுதிக் கட்டங்கள் அதிகம் சேதங்களுக்கு உள்ளாகின.

கிளிநொச்சி வான்பரப்பிற்குள் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் கிளிநொச்சி நகரின் மீது வட்டமிட்டு பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனால் கிளிநொச்சி பாடசாலைகள் மாணவர்கள் பெரிதும் அவலப்பட்டனர். உடனடியாகவே பாடசாலைகள் மூடப்பட்டன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.