Wednesday, May 16, 2007

யாழ் கல்வி வலையப் பணிப்பாளர்கள் கொழுப்புக்கு அவசர அழைப்பு

[புதன்கிழமை, 16 மே 2007] யாழ் குடாநாட்டின் ஜந்து கல்வி வலையப் பணிப்பாளர்களும் அவசரமாக கொழும்பு வருமாறு சிறீலங்கா கல்வி அமைச்சினால் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் கல்வி வலையம், வலிகாம கல்வி வலையம், வடமராட்சி கல்வி வலையம், தென்மராட்சி கல்வி வலையம், தீவகக் கல்வி வலையத்தைச் சேர்ந்த ஐந்து பணிபாளர்களுமே கொழும்பு அழைக்கப்பட்டுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் மீதான சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்களின் கொலை அச்சுறுத்தல் மற்றும் மாணவர்களின் கடத்தல்களை கண்டித்து கடந்த இருவாரமாக முன்னெடுக்கப்படும் கல்விப் புறக்கணிப்பால் கல்வி பாதிக்கப் பட்டதையடுத்தே இவர்கள் கொழும்பு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.