[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் சில வான் தாக்குதல்களை அவர்கள் நடத்தும் பட்சத்தில் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்றுவிடும். இது போரை நடத்துவதற்கு அரசு பணத்தை அச்சிடும் நிலையை ஏற்படுத்தும். கிழக்கில் படையினரின் வெற்றி தொடர்பாக அரசு கலர் கலரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த வேளை. போரை 2 அல்லது 3 வருடங்களுக்குள் முடித்துவிடலாம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால் அவரது கூற்றை வான்புலிகள் தலைகீழாக்கி விட்டனர். அரசு போரின் செலவை தாங்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Sunday, May 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.