Thursday, December 14, 2006

அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானார்

அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், லண்டனின் இன்று வியாழக்கிழமை காலமானார். 35 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிப்புற்றிருந்த இவர், 90களின் பிற்பகுதியில் சிறுநீரக மாற்றீடு செய்துகொண்டார். இவருக்கு புற்றுநோய் பரவியிருந்தமை, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த இவர், தனது 68வது வயதில், காலமானார். இவரது உயிர்பிரியும் வேளை, இவரது பாரியார் அடேல் பாலசிங்கம் உடனிருந்தார். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடி ஈடுபாடு கொண்டிருந்த பாலசிங்கம் அவர்கள், 1985ம் ஆண்டு முதல் பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாகப் பங்கெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.