அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான் மகிந்த ராஜபக்ச
சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம்.ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது.
ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம்.ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.
பேச்சுக்கு தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடமிருந்து உறுதிமொழி வேண்டும்.
சிறிலங்காவைப் பொறுத்த வரையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகளைத் தவிர வேறு அரசியல் ரீதியான எதுவித எல்லைக் கோடுகளும் இல்லை. சிங்களப் பேரினவாத கட்சிகள் எமது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது.ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய கோருவதைப் போல் நோர்வேயை நாம் வெளியேற்ற முடியாது என்றார் மகிந்த ராஜபக்ச.
Sunday, September 24, 2006
Sunday, September 24, 2006





