மட்டக்களப்பில் படையினரின் இராணுவ நடவடிக்கை முறியடிப்பு. சிறிலங்கா படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றர். இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை கிரான் பாலத்தில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான புலிபாய்ந்தகல் பகுதிக்கு முன்னேற முயன்ற படையினர்க்கும் விடுதலை புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி படையினர்க்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சமரின் போது படையினர் பழைய இடங்களுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்து. இத்தாக்குதலின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலின் போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள பிரதேச செலயகத்தின் கட்டம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் இருந்த பொருள்களை இராணுவத்தின் அபகரித்து சென்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





