Friday, September 01, 2006

மகிந்த ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் குறித்து --

நோர்வே சிறப்புத் தூதருக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் மகிந்த ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயருக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகிந்தவின் இங்கிலாந்து பயணமானது இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கானது என்று ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாக நோர்வே அரச வானொலி கருத்து தெரிவித்திருந்து.இது குறித்து சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:எமது அரச தலைவரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த பௌயருக்கு உரிமை இல்லை. அனுசரணையாளர்களுக்குரிய வரம்புகள் மீறப்படுகின்றன.இருநாட்டு தலைவர்களிடையே விவாதிக்கப்பட்ட விடயம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது என்றார் கேகலிய ரம்புக்வெல.ஊடக அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா கூறியதாவது:மகிந்தவின் இங்கிலாந்து பயணம் குறித்து ஜோன் ஹன்சன் பௌயர் கருத்துத் தெரிவித்திருக்க கூடாது. பௌயரின் கருத்து குறித்து என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மகிந்தவின் தனிப்பட்ட பயணம் அது. பௌயர் வெளியிட்டுள்ள கருத்துகள் மரபுகளை மீறியவை என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.