உள்ளுராட்சித் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து கூட்டமைப்பை தமிழ் மக்கள் பெரு வெற்றியடையச் செய்துள்ளனர். இத்தெளிவான தீர்ப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்ற அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை மீதும், அதன் இலட்சியத்தின் மீதும் நம்பிக்கை வைத்து, நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களித்து எம்மை அமோக வெற்றிபெறச் செய்த எமது மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நாம் பெரு வெற்றியைப் பெற்றிருக்கின்றோம். எதிர்பார்த்த நகர சபை, பிரதேச சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம். ஏனைய சபைகளிலும் கணிசமான அளவு வெற்றி கிடைத்துள்ளது.
அதற்காக வாக்களித்த எமது மக்களுக்கும் வெற்றிக்காக முன்னின்று உழைத்தவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசின் அமைச்சர்களும், அரசின் முகவர்களும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர் குழாமும் அதிகாரங்களையும் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தியும், ஆங்காங்கே முகாமிட்டு ஆயுத முனையில் எமது வேட்பாளர்களையும் மக்களையும் அச்சுறுத்தியும் வாக்குகளை அபகரிக்க முயற்சித்தபோதும் தமிழ் மக்கள் பெருமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து மக்களின் வெற்றியை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தமிழ் மக்களின் இத்தீர்க்கமான தீர்ப்பும், பெற்ற வெற்றியும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் நடைபெறும்போதும் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கையுண்டு. இவ்வாறு மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.