Thursday, March 31, 2011

அரசால் தரமுடியாத எதனையும் தமிழ் மக்கள் கேட்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தால் தர முடியாத எத்தனையும் நாங்கள் கேட்கவில்லை. அத னால் தரக் கூடியவற்றைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் கேட்பது உண்மை யான ஒரு அதிகாரப் பகிர்வைத்தான். அந்த அடிப்படையில் அரசாங்கம் எங்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன் றைப் பெறுவதற்கான ஆணையை அது மக் களிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த உண் மையை இலங்கை அரசாங்கம் கெளரவித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் உள்ள தனது பலத்தை மூன்றாவது முறையாகவும் நிரூபித்திருக்கிறது. முதலில் ஜனாதி பதித் தேர்தலிலும் பின்னர் நாடாளுமன் றத் தேர்தலிலும் இறுதியாக உள்ளூ ராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் அது மக்களின் ஆதரவைப் பெற்று தனது பலத்தை வெளிக்காட்டியுள்ளது. இதனூடாக வடக்குக் கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஒரு கட்சி அது என்ற செய்தியை தெற் கிற்கு தெரிவித்திருக்கின்றது. இந்தத் தேர்தலின் ஊடாக ஜனா திபதி மகிந்த ராஜபக்ச தெற்கின் ஆணையை பெற்றிருப்பாரானால் ஐக்கிய இலங்கைக்குள் இந்தப்பிரச் சினையை தீர்ப்பதற்கு சரியான தீர்வை முன்வைக்க வேண்டிய தருணம் இதுவே.

தந்தை செல்வநாயகம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தார். வேலுப் பிள்ளை பிரபாகரன் அதனைத் தொடர் ந்து முன்னெடுத்தார். அந்த நேரத்தில் மக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இன்று நாங்கள் மக்களிடம் தனித்த ஒரு அரசுக்காக முயற்சி செய் வதாக சொல்லவில்லை. பொருத்தமான ஒரு அதிகாரப்பகிர்வுக்காகவே நாங் கள் முயற்சி செய்வதாக சொல்லி வரு கின்றோம். இதன் காரணமாக அரசாங் கம் எங்களுடன் ஏதாவது ஒரு உடன் பாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

புலிகளின் காலத்தில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் படிமக்களை பலவந்தப் படுத்தினார்கள். ஆனால் இன்று புலிகள் தோற்கடிக் கப்பட்ட பின்னரும் மக்கள் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கே ஆதரவளிக்கிறார் கள். இது மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதைக்காட்டுகிறது. எனவே அவர்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவாறான ஒரு தீர்வைக்காண்பது எமது கடமையாகும். இதனைத்தான் நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து வருகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதா வது உடன்பாட்டின் கீழ் அரசாங்கத்து டன் இணைந்து எதிர்காலத்தில் பணி யாற்றுமா என்று கேட்டபோது அரசாங் கம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்று தொடர்பில் உத்தரவாதம் அளிக் கும் என்றால் கட்சி அது குறித்து பரிசீ லிக்கும் என்று கூறிய சுரேஷ் பிரேமச் சந்திரன், அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்துடன் இணைவதில் என்ன தான் பிரயோசனம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்தோடு வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் அதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை நிரூபிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் தற்போதைய அரசுக்கு தமிழ்த்தே சியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கத் தயார். ஆனால் அதற்கு முதல் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்பு டைய ஒருதீர்வை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.