Tuesday, February 22, 2011

விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார் நவ சம சமாய கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண.

இவரது இரங்கல் செய்தி வருமாறு:-

"வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்காக அளப்பரிய தியாகத்தை இத்தாயார் செய்துள்ளார். யுத்தகாலத்தில் பாரிய துன்பச் சூழ்நிலையில் வாழ்ந்து உள்ளார்.

பிள்ளை, மருமகள், பேரப் பிள்ளைகள் ஆகியோரை யுத்தத்தில் பறிகொடுத்துள்ளார். தமிழர் தாயக விடுதலைக்காகத் தியாகங்கள் பல புரிந்த ஆயிரம், ஆயிரம் தாய்மார்களுள் பார்வதியம்மாளும் உள்ளடங்கி உள்ளார்.

இவர் எம்மைவிட வேறான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் தமிழரின் தாயக விடுதலைக்காக அளப்பரிய தியாகத்தைப் புரிந்து உள்ளார்.

தமிழரின் தாயக விடுதலையை நேசிக்கின்ற ஒவ்வொருவரும், இந்நாட்டின் ஜனநாயகத்துக்காக, சுதந்திரத்துக்காகப் போராடுகின்ற ஒவ்வொருவரும் இத் தாயாருக்கு கௌரவமான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று நவ சமசமாய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்."

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.