Saturday, February 12, 2011

வடமராட்சியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து வயோதிபர் மரணம்!

யாழ். வடமராட்சியில் அச்சுவேலிப் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு நேற்று தேநீர் கொண்டு சென்ற முதியவர் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிர் இழந்தார்.

அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கணேசமூர்த்தி (வயது-62) என்பவரே இறந்தவர்ஆவார்.

வலிப்புக் காரணமாகவே இவர் தவறி கிணற்றுக்குள் விழுந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.