Sunday, February 06, 2011

கே.பியின் அரசியல் பிரவேசத்தை பொருட்படுத்தாத கூட்டமைப்பு!

கே.பியின் அரசியல் பிரவேசத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பொருட்டாககூட கருதவில்லை என்று தெரிவித்து உள்ளார் அக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி. இவர் கே.பியின் அரசியல் பிரவேசம் குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:-

கே.பியின் அரசியல் பிரவேசம் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரை ஒரு முக்கியமான விடயமே அல்ல. வன்னி மாவட்ட மக்களில்அநேகமானவர்களுக்கு கே.பியின் முகம் தெரியாது. ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு.

எல்லா பிரஜைகளும் அரசியலில் ஈடுபடக் கூடிய நிலையை அரசு உருவாக்கித் தர வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கே.பி ஒரு சவால் அல்ல.

எனது கே.பியின் அரசியல் பிரவேசத்தை கூட்டமைப்பு கணக்கில் எடுக்கவே இல்லை. புலிகள் இயக்கத்தில் கே.பி முக்கிய பிரமுகர்தான். ஆனால் அதிகமான வட பகுதி மக்களுக்கு இவர் பரிச்சயமானவர் அல்லர்.

1 comment:

  1. இந்த கே.பி என்பவர் எம் தலைவரால் புறந்தள்ளப்பட்டவர். இவரை நிச்சயமாக மான ஈன முள்ள தமிழர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.