Sunday, February 13, 2011

மஹிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது: திவயின பத்திரிகை தகவல்.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்காவின் நீதிமன்றமொன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்குத் தொடர்பாக அவருக்கு அழைப்பாணை விடுக்க முடியாது என்று திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஐந்து மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளளது. அது தொடர்பான செய்தியிலேயே திவயின பத்திரிகை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

ஒரு நாட்டின் தலைவருக்கெதிராக இன்னொரு நாட்டினால் செயற்பட முடியாது. அதே போன்று இன்னொரு நாட்டின் தலைவருக்கெதிராக அமெரிக்க நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்ப முடியாது என்றும் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திர ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் ஜனாதிபதிக்கெதிரான வழக்கின் வாதி தரப்பு சட்டத்தரணியான புரூஸ் பெயின் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக ஜனாதிபதிக்கெதிரான அழைப்பாணையைக் கையளிக்குமாறு வற்புறுத்தி வருகின்றார். அவ்வாறான நிலையில் இந்த வழக்கினால் ஜனாதிபதிக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது, அது வெறும் பிரபலத்துக்கான பிரச்சாரம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.