தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் வைத்து இன்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகத்தை சுற்றிவளைக்க முற்பட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இன்று அதிகாலை, இலங்கைக்கு வர முற்பட்ட வேளையில் அவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து அவர் சென்னைக்கு திருப்பியனுப்பப்பட்டார். இதனை ஆட்சேபித்தே சென்னையில் அவரின் கட்சியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு சென்றிருந்தார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்ற கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைத் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் இன்று (22-02-2011) காலை 10.30 மணியளவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையேற்றார். ஆயிரக்கணக்கில் திரண்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் இலங்கைத் தூதரகத்தை நோக்கிப் பயணமானார்.
அப்போது, வீரவணக்கம் வீரவணக்கம் அன்னை பார்வதி அம்மாளுக்கு வீரவணக்கம்! அப்புறப்படுத்து அப்புறப்படுத்து சிங்களத் தூதரகத்தை அப்புறப்படுத்து! அவமானம் அவமானம் இந்தியாவுக்கு அவமானம்! ஆகிய முழக்கங்களை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எழுப்ப, ஆயிரக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் உடன் எழுப்பிய சிங்களத் தூதரகத்தின் உள்ளிருப்போரை அதிரச் செய்தது.
இலங்கை கொடியும், ராஜபக்சே உருவப்படமும் எரிக்கப்பட்டன. 1 மணி நேரத்திற்கும் மேலாக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். சாலையிலேயே அன்னை பார்வதி அம்மாள் திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை அரணை மீறி தூதரகத்திற்கு உள்ளே முயன்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களையும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முற்றுகைப் போராட்டத்தில் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், கா. கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், ழில் கரோலின், பூவை வல்லரசு, மாவட்டச் செயலாளர்கள் வீரமுத்து, கபிலன், இளஞ்செழியன், சூ.க. விடுதலைச்செழியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.