சாமாதான அனுசரனையாளர்களான நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி பயணத்திற்கு தம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது தடவையும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் கைவிடப்பட்டதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்தனர்.
ஓமந்தையில் இருந்து எம்மால் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நோர்வே தூதுவர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆகியோரின் கிளிநொச்சிக்கான பயணத்தை பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு தடுத்துள்ளது.
கிழக்கில் ஏ-5 பாதையை கைப்பற்றிய பின்னர் அரசு தனது போர் முனைப்புக்களை வடபோர் முனை நோக்கி திருப்பியுள்ளதுடன் அங்கு அண்மைக்காலமாக தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.