[புதன்கிழமை, 16 மே 2007] கடந்த 14.05.07 அன்று நாட்டைக் காக்கும் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் யாழ் பல்கலைக் கழகத்தில் ஒட்டப்பட்ட பிரசுரத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது தாயக விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் என்பது மாணவ சமூதாயத்தின் மேல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அழுத்தங்களில்தான் விரிவடைந்து இன்றைய ஆயதப்போராட்ட நிலையை அடைந்தது என்பதை நாம் வரலாற்றை படித்தே உணர்ந்து கொண்டவர்களாக புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய இந்த சிவரொட்டியானது அந்த வரலாற்றைப் படித்துப் புரிந்துகொண்ட அன்றைய யதார்த்த நிலையை நேரடியாகவே காணவைத்துள்ளது. இதனால் எமது மனநிலையானது சோர்ந்து போகவில்லை மிகவும் தீவிரமடைகின்றது. எமக்கான தயாத்தை மிகவிரைவில் தோற்றுவிப்பதற்காக மிகவும் தீவிரமாக நாம் உழைக்க வேண்டும் என்கின்ற அத்திய அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 270 பேருக்கான மரணதண்டனை எச்சரிக்கை என்பது யாழ் குடாநாட்டு மக்களின் மூளைவளத்தை சீர்குலைத்து ஒரு சமூதயாத்தின் சிந்தனாசக்தியை மழுங்கடிக்கும் ஒரு பாரிய நீண்ட இன அழிப்பு போர் வெறியாட்டம் என்றே நாம் உணர்ந்து கொள்கின்றோம். எந்த பெயரில் எவ்வாறான அறிக்கையை இவ்வாறு யார் வெளியிட்டிருப்பார்கள் என்பதை இன்றைய நிலையில் ஊகித்து அறிந்துகொள்வதற்கு யாருக்கும் பெரிய அறிவாற்றல் தேவையற்றது. அரசும் அரசுசார்ப்பு இயங்கங்களுமே இவ்வாறான கீழ்தரமான வேலைகளை செய்வார்கள் என்பதை நாம் உணர்கிறோம். விடுதலையின் வாசலில் நிற்கும் எமது இனம் மிக விரைவில் விடுதலையைச் சுவாசிக்கப்போகும் இந்த நேரத்தில் இவ்வாறான செயல்களை புரியும் கோடறிகாம்புகளை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கிளை
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.