Tuesday, March 06, 2007

மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அமெரிக்க பிரதிநிதி சிறிலங்கா வருகிறார்.

[செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007]

மனித உரிமை, அமைதிப் பேச்சுக்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அமெரிக்காவின் மூத்த பிரதிநிதி ஒருவர் இந்த வாரம் சிறிலங்காவிற்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரின் ஆசியப் பிராந்தியத்திற்கான பிரதி உதவியாளரான சிறீவன் மான் நாளை மறுதினம் வியாழக்கிழமை வருகை தந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினாலும் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக்கினாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு ஒன்று செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சிறிலங்காவும் அமெரிக்காவும் அமைதிப்படை நடவடிக்கைகள், மனிதாபிமான பணிகள், கூட்டு நடவடிக்கைகளில் தேவையான பொருட்களை மாற்ற அல்லது வழங்கவோ, உதவிபுரியவோ, சேவைகளை மறுசீரமைக்கவே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.