[ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007]
நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் இனம்தெரியாத நபர்களால் உடுவில் சந்திப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் வாகனம் பலத்தசேதத்திற்கு உட்பட்டிருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது. இதன்போது இதில் பயணித்தி சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வு படைப்பிரிவினர் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா இராணுவத்தினர் தமது வாகனம் கிளைமோரை கடந்து சிலநிமிடத்திலேயே வெடித்ததாக தெரிவித்தபோதும் குடிசார் தகவலிலன்படி அப்பிரதேசத்தில் உடைய வாகனத்தின் பாகங்கள், கண்ணாடி துகள்கள், இரத்தக்கறைகள் என்பன காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இரவு வேளையில் ஊரடங்கு அமுலில் இருந்த சமயம் இது நடைபெற்றதால் இராணுவத்தினர் காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்த வாகனத்தில் பகுதிகளையும் விடிவதற்கு முன்பே அகற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை பலாலி இராணுவத்தினர் இதுதொடர்பில் எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை.
அம்பாறை பொத்துவில் பகுதியில் இன்று காலை 9.55 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து அணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அதிகாரி ஒருவர் கொல்லப்ட்டுள்ளார்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவ்இடத்தைவிட்டு தப்பி ஒடியுள்ளனர்.





