Sunday, April 15, 2012

கோத்தபாயவின் கடத்தல் மன்னன் வசமாக மாட்டிக்கொண்டார் !


இலங்கையில் பல வெள்ளைவான் கடத்தலில் ஈடுபட்டுவந்த கோத்தபாயவின் இடதுகை நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையைச் சேர்ந்த கோப்ரலான சமரஜீவ கருணாரட்ன என்பவரே பல கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். வட-கிழக்கிலும் மற்றும் தென்னிலங்கையில் நடைபெற்ற எண்ணற்ற கடத்தல் சம்பவத்தோடு இவருக்கு தொடர்பு இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கோத்தபாயவின் வலது கையாளாகச் செயல்பட்டு வந்த சமரஜீவ, நாட்டில் எந்த இடத்துக்கும் தடையின்றிச் சென்றுவர உத்தரவு வழங்கப்பட்டிருந்ததாம். அவரது வெள்ளை வாகனம் ஜனாதிபதி மாளிகைவரை சென்று திரும்பும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோப்ரல் சமரஜீவ கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி கொலன்னாவ மாநகர சபையின் மேயர் ரவீந்திரராசா உதயசாந் என்பவரைக் கடத்த முற்பட்டவேளை பாவித்த வெள்ளை வாகனத்தை, அதிஷ்டவசமாக சிலர் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்தே இந்த வாகன இலக்கமான டபிள்யூ. பி.சி.சி 8646 என்ற இலக்கத்தகடு கொண்ட வாகனத்தை சில சிங்களவர்கள் ஆராய்ந்து குறிப்பிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர். கோப்ரல் சமரஜீவ தான் கடத்தல் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி என்பதனை நிரூபிக்க சாட்சிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள சில சிங்கள அரசியல்வாதிகள், தாம் நீதிமன்றப் படியேறி சாட்சி சொல்லத் தயார் எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கொழும்பில் உள்ள எந்த ஒரு சட்டத்தரணியும் இந்த வழக்கை எடுத்து வாதாட முன்வரவில்லை என்பது வருந்தத்தக்க விடையம் ஆகும்.

கொலன்னாவ மாநகர சபையின் மேயர் ரவீந்திரராசா உதயசாந் கடத்தல், மற்றும் பல கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய கோப்ரல் சமரஜீவ தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்து விசாரணை நடத்த எந்த ஒரு பொலிசாரும் முன்வரவில்லை. கோத்தபாயவின் வலது கரமாகச் செயல்பட்டு பல கடத்தல்களை மேற்கொண்டுள்ள இந் நபரைக் கைதுசெய்யவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந் நபர் கடத்தலில் ஈடுபட்டதை கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ள நிலையில், இவர் மீது இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ! குறிப்பிட்ட இந் நபருக்கும் பல கொலைகளுக்கும் சம்பந்தம் உள்ளதாக தற்போது அறியப்படுகிறது என லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் !

 

அதிர்வு இணையம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.