இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் அதற்கு தமிழீழம் மாத்திரமே
முடிவாகும். அதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர்களுக்காக பொது
வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணாவிடின் மீண்டும்
விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்' என்று ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர். இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது.
இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இறந்துவிட்டார்கள் என்று இலங்கை அரசு கருதலாம். ஆனால் அவர்கள் பின்னால் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள். பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?
வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடக்கப்பட்ட இனம் எமதினம். எமது இலட்சியம் தமிழீழம். நாம் சுயமாக நலமாக சுதந்திரமாக வாழ அதுவே தீர்வு. ஏழு கோடி தமிழர் உலகில் இருந்தும் நாம் அநாதைகளாக சாகடிக்கப்பட்டோம். இனியாவது ஒன்றினைந்து பேதங்களை மறந்து எமது இலட்சியத்திற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். அல்லாது போனால் வெகு விரைவில் ஈழத்தில் தமிழன் என்ற இனமே அழிக்கப்படும்.
ReplyDeleteஉரிமை இழந்தோம் ..
ReplyDeleteஉடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..