Tuesday, February 01, 2011

புலம்பெயர் தமிழ் அமைப்புடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது: ஆனால் நோர்வேயை நடுநிலையாளராக வைக்க விரும்பவில்லையாம்!

நோர்வேக்கு சிறப்பு நிலைக் கடமைகள் எதையும் வழங்குவதற்கு விரும்பவில்லை என்று இலங்கை அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசியல், இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதை இலக்காக வைத்து போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணைகள் நடத்தப்படவேண் டும் என்று வலியுறுத்தி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நோர்வேயை நடுநிலையாளராக நியமிக்க சிறிலங்கா விரும்பவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில் புலம்பெயர் தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் தூதுவராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அரசு உயர்வட்டாரங்கள், இலங்கையில் நோர்வேக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ சிறப்பு நிலைப் பாத்திரத்தை வழங்க முடியாது. போருக்குப் பிந்திய நிலைமைகளைச் சீர்செய்வதற்கு எந்தவொரு புலம்பெயர் அமைப்புடனும் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது. இதற்காக நோர்யையோ அல்லது வேறெந்தத் தரப்பையோ நியமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.