அரசாங் கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக் கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க விடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிர்காலம் ஒன்று இல்லை என குறிப்பிட்ட ரணில் விக்ரம சிங்க, இந்த அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்குவதற்கு இந்த மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.