இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் விடுதலைக்காக குரல் கொடுத்த 10 பேர் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கூடலூர் மாவட்டத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மனித உரிமைகள் ஆர்வலர் பிரபா கல்விமணி, வக்கீல்களான கார்த்திகேயன் மற்றும் திருமுருகன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள்.
இம்மாவட்டத்தில் சம்பவ தினம் இரவு மாபெரும் மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் 10 பேரும் பேச்சாளர்களாக பங்குபற்றி இருந்தனர். சுமார் 250 பேர் வரை பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றியபோது நளினியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், நளினிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த தமிழின உணர்வாளர்களின் தியாகங்களுக்கு இந்தியா பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்தனர்.
மாநாட்டை கலைத்த பொலிஸார் பேச்சாளர்கள் 10 பேரையும் கைது செய்தனர். 10 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.