Tuesday, January 25, 2011

மஹிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

தற்போது அமெரிக்காவில் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைக் கைது செய்யுமாறு வெள்ளை மாளிகைக்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது சுமார் 100 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த மகிந்த ராஜபக்ஸவைக் கைது செய்ய வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.காலை 11 மணிமுதல் 3 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பொஸ்டனில் தங்கியுள்ளார். அவர் மருத்துவ காரணங்களை முன்னிட்டே அமெரிக்கா சென்றுள்ளதாக இலங்கைஊடக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யுத்தக் குற்றவாளிகளை இனம் கண்டு அமெரிக்க நிர்வாகம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், எந்தவொரு நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் இது அவசியமானது என்றும் அமெரிக்க ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கும் டாக்டர் தயாபரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சில முக்கிய நபர்களும் இதேபோன்றதோர் கோரிக்கையை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.