இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுகின்ற நபர் யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக பல்கலைக்கழக வட்டாரங்களை மேற்க்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
குமரன் பத்மநாதன் முழங்காவில் பகுதியில் பண்ணை ஒன்றினை மேற்பார்வை செய்து வருவதாகவும், அங்கிருந்து வன்னியின் ஏனைய பகுதிகளுக்கு பயணித்து வருவதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை விடுதலைப்புலிகள் பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியராகப் பணியாற்றிய பொபி (முன்னாள் போராளி) என்கின்ற நபரும் அண்மையில் அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக இருந்த நபர்களை அணுகி தம்முடன் இணைந்து செயற்படவருமாறும் புதிய கட்சி ஒன்றினை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிப்பதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.