சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள், புத்திஜீவிகள் ஆகியோர்கள் இலங்கையினை ஓர் சிங்கள பெளத்த நாடாக மட்டும் அதாவது 100 விழுக்காடு சிங்கள பெளத்த நாடாக மாற்றும் நடவடிக்கையில் கடந்த 2000 வருடங்களாக திட்டமிட்டு முயற்சி செய்தே வருகின்றனர். ஆனால் இதனை வெளிப்படையாக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், மஹிந்த இராஜபக்ஷவும் கூட்டணி அரசும் சிறிலங்கா ஓர் பெளத்த பேரினவாத நாடு எனவும் , மஹிந்த சிந்தனையின்படி நாட்டை வழி நடத்த போவதாகவும் கூறிவருகின்றனர். விடுதலைப்புலிகளின் காலத்தில் இவற்றை வெளிப்படையாக கூறினால் அவர்களது பிரிவினைவாதத்திற்கு ஆதரவு பெருக கூடும் என்பதே அட்சியாளர்களின் கணிப்பீடு. ஆனால் சிங்கள மக்களிடையே இந்த நச்சு விதையினை விதைத்து வருவதில் சிங்களம் பின் நிற்கவில்லை.
தென் சூடான் எனும் புதிய நாட்டின் உதயமும் சிங்களத்தின் பீதியும்
தென் சூடான் தாம் பிரிந்து செல்வதற்கான சுய நிர்ணைய உரிமையினை சர்வதேச ஒத்துழைப்புடன் பெற்றதும், அங்கு பிரிந்து செல்வதற்கான ஓர் தேர்தல் நடாத்தப்பட்டதும், அந்த தேர்தலில் 99 விழுக்காடு மக்கள் தாம் பிரிந்து செல்வதற்காக வாக்களித்து வெற்றி பெற்றதும் சிங்களத்திற்கு பீதியினை ஏற்படுத்திவருகின்றது.
இதுபற்றி சிங்கள ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் தமக்குள்ளேயே ஆய்வுகளையும், விமர்சனங்களையும் செய்தும் வருகின்றனர். அண்மையில் ஓர் சிங்கள ஆய்வாளர் குமார மோஷஸ் என்பவர் தெற்கு சூடான் விடுதலை அடைந்தது பற்றியும் சிங்களத்தின் எதிர்காலம், சிங்களம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் எழுதி இருந்தார்.
அதாவது இன அடையாளங்களும் மத அடையாளங்களும் மேலோங்கி நிற்கின்ற சிறுபான்மையினரின் அரசியல் நடவடிக்கையானது பிரிவினை வாதத்திற்கு என்றோ ஒரு நாள் அடிகோலும் என்றும் இதன்படிதான் கொசோவா, எரித்திரியா, கிழக்கு தீமோர், சொமாலிலான்ட் தெற்கு சூடான் ஆகியன இந்த தசாப்தத்தில் புதிய நாடுகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன.என்றும் கூறுகின்றார்.
தெற்கு சூடான் போலவே விடுதலைப்புலிகளும் திட்டமிட்டு காய்களை நகர்த்தினர், இடைக்கால நிர்வாக சபையினை கேட்டிருந்தனர் ஆனால் நல்ல வேளை புலிகள் தோற்றுவிட்டார்கள். இல்லையேல் வடக்கு கிழக்கிலும் இப்போ பிரிந்து செல்வதற்கான தேர்தல் நடந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் புலிகள் வென்றிருப்பார்கள். ஆகையால் சிங்களவர்களாகிய நாம் உசாராக இருக்க வேண்டிய காலம் முடிந்து விட்டது இப்போ நடவடிக்கை நோக்கிய காலம் விரைவாக செயற்படவேண்டும் என கூறியுள்ளார் அந்த சிங்கள ஆய்வாளர்.
இப்போது கூட வடக்கு கிழக்கில் பிரிந்து செல்வதற்கான தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?
இவ்வாறு அவரே ஓர் கேள்வியினை போடுகின்றார். இந்த கேள்விக்கான பதிலாக சிங்களம் என்ன சொல்கின்றது?
வடக்கு கிழக்கில் தேர்தல் நடந்தால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி 100 வீதம் பிரிந்து செல்வதற்காக வாக்களிப்பார்கள். திருகோணமலை, அம்பாரை அப்படி இருக்காது ஏனென்றால் அங்கே சிங்கள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த இரு மாவட்டங்களும் இப்படி ஆனதிற்கு காரணம் அப்போது ஆட்சியில் இருந்த டி.எஸ்.சேன நாயக்கா அவர்களே அவர் செய்த நீண்டகால திட்டமே சிங்களவர்க்கு இந்த இரு பிராந்தியங்களிலும் தாம் வலுவாக இருக்க காரணம் என்கிறார் சிங்கள ஆய்வாளர்.
கிறிஸ்தவ ஆதிக்கமும் மேற்கத்தைய செல்வாக்கும்.
செங்கடல் மற்றும் ஆசிய கடல்போக்குவரத்தில் சொமாலிலான்ட், தெற்கு சூடான், எரித்திரியா போன்ற நாடுகள் முக்கியமானவை அங்கு கிறிஸ்தவ மதத்தினை பரப்பி இப்போ மேற்குலகம் பிரிவினையினை ஏற்படுத்தி தனி நாடுகளாக ஆக்கியுள்ளது. இதே வேளை டாபூர் என்கின்ற நாட்டில் மக்கள் மிகப்பெரும் துன்பத்தில் இருக்கின்றனர் ஆனால் மேற்குலகம் இதனை பெரிதுபடுத்துவதும் இல்லை; உதவிகளையும் மட்டுப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள். ஆனால் தென் சூடானில் அவசரப்பட்டமைக்கு காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள் எனவும் வாதிடுகின்றனறார் சிங்கள ஆய்வாளர்.
இலங்கையில் வடக்கு கிழக்கிலும் கிறிஸ்தவர்கள் குறைவாக இருந்தபோதும் கிறிஸ்தவ பாதிரிமார்களின் ஆதிக்கம் பிரிவினைவாதத்தில் அதிகம் இருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் கிறிஸ்தவ ஆதிக்கம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றார். விடுதலைப்புலிகள் வீழ்ச்சியடைந்த பின்னரும் உள் நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி விடுதலைப்புலிகளிலும், ஆதரவாளர்களிலும் ஏன் அவர்களின் பிரிவினை வாத செயற்பாடுகளிலும் கிறிஸ்தவ ஆதிக்கம் இருக்கின்றதாம்.
இது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட சதியே எவ்வாறு ஆபிரிக்காவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக மேற்கு கிறிஸ்தவ மத செயற்பாட்டை வைத்து பிரிவினைகளை ஏற்படுத்திவருகின்றதோ அவ்வாறே ஆசியாவில் சீன, இந்திய ஆதிக்கத்தினை உடைக்க கிறிஸ்தவ ஆதிக்கத்தினை பயன்படுத்தி தமிழீழத்தினை உருவாக்க விரும்புகின்றது என்கின்றார் இந்த ஆய்வாளர்.
ஆனால் வடக்கு கிழக்கில் கிறிஸ்தவர்கள் 30 விழுக்காடு மட்டுமே ஏனையோர் இந்துக்கள். அகவே இந்தியாவுடன் சிங்கள தேசம் நெருக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறுகின்றார் சிங்கள பேரினவாதி.
இது மட்டும் அல்ல இந்த ஆய்வாளர் பின்வரும் சிபார்சுகளையும் வழங்குகின்றார். இவை உடனடியாக செய்யப்படவேண்டுமாம்.
வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிராந்தியங்களில் தமிழர் ஆதிக்கத்தினை இல்லாது செய்ய உடனடியாக சிங்களவர்களை குடியேற்ற வேண்டும். இதற்காக படைத்தரப்பின் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்றம் செய்யவேண்டும். மஹிந்த அரசு இப்போ தற்காலிக குடியேற்றம் செய்கின்றது. அத்துடன் இராணுவ முகாம்களை குறைக்க திட்டமிடுகின்றது இது ஏற்றுக்கொள்ள முடியாது. என்கிறார்.
வடக்கு கிழக்கில் சர்வதேச நிறுவனங்களை அறவே அனுமதிக்க கூடாது.
கிறிஸ்தவ ஆதிக்கத்தினை அடியோடு அழிக்க வேண்டும்.
வெளி நாட்டு மிசனரிகளை முற்றாக தடை செய்ய வேண்டும்.
அம்பாரை திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சேன நாயக்கா செய்தது போன்று நீண்டகால திட்டத்தினை வடக்கில் ஆரம்பிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இருந்துவரும் தமிழர்களிற்கு நீண்டகால வீசா வழங்க கூடாது.
இவ்வாறு பல திட்டங்களை செய்யுமாறு சிபார்சு செய்துள்ளார் இந்த இனவாத ஆய்வாளர்.
தெற்கு சூடானில் புலிகளின் செல்வாக்கு
தெற்கு சூடானில் புலிகளின் செல்வாக்கு நிலவி வருகின்றது. புலிகளை புதிய நாட்டிற்கு வருமாறு ( நாடு கடந்த அரசு) தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது. இதுவும் கிறிஸ்தவ செல்வாக்குடனான மேற்கின் வேலையாகவே இருக்கும். புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் இன்னமும் தனி நாட்டு கொள்கையினை கைவிடவில்லை. அவர்கள் வெளி நாடுகளில் வலுவாக தனி நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடுகின்றனர். உள் நாட்டில் தமிழ் தெசிய கூட்டமைப்பு கொள்கையினை கைவிட்டுள்ளது ஆனால் தனி நாட்டிற்கான அடித்தளமான தமிழர் பிரதேசம் என்ற கொள்கையினை கைவிடவில்லை. அவர்கள் அதனை தேர்தல்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர். என்கிறார் குமார மொஷஸ்.
குறிப்பு: சிங்கள பேரினவாதமும் புத்திஜீவிகளும் எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள். சிந்தனையில் தெளிவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றார்கள். ஆனால் சிங்களத்திற்கு வக்காளத்து வாங்கும் எம்மவர் சிலரையும், சேர்ந்து இயங்கும் சிலரையும், சிங்களத்துடன் நல்லிணக்கம் பேசும் சிலரையும் எம்மினத்தினிடையே பார்க்கின்றோம். இவர்களும் எம் இன இருப்பிற்கான சவால்களே.
- தாமரை

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.