இந்திய உளவு அமைப்பான "றோ”வின் தலைவராக சஞ்சீவ் திரிபாதி நியமிக்கப்படுகிறார் எனத் தெரியவருகிறது.
தற்போது அவர் றோ அமைப்பின் துணைப் பிரிவான விமானப் போக்குவரத்து ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார்.
தற்போது றோவின் தலைவராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலகவர்மா முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது இடத்திற்கு திரிபாதி கொண்டு வரப்படுகிறார். திரிபாதி வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு "றோ”தலைவர் பதவி தேடி வந்துள்ளது.
"றோ”அமைப்பின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் றோ அமைப்பின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.