அம்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நவகிரி குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இக்குளத்தின் இரண்டு அடி நீர் திறந்துவிடப்படவுள்ளதாக போரைதீவுப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு குளத்தின் மேலதிக நீர் திறந்து விடப்படும்போது போது வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை, ஆணைகட்டியவெளி, நாவிதன்வெளி ஆகிய கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
அதன் காரணமாகக இக்கிராமங்களிலுள்ளவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் செஞ்சிலுவை சங்கத்தின் அனர்த்த மீட்பு குழு தயாராகவுள்ளதாக சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது..
வெள்ள அனர்த்தம் காரணமாக இக்குளத்தின் நீர் கடந்த வருடமும் இதே மாதத்தில் திறந்துவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.