Saturday, April 24, 2010

சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை?

சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக தெரிவித்தமையை சிறந்த பதிலாக அரசாங்கம் கருதுகிறது.

இது பேச்சுவார்த்தைக்கான சிறந்த ஆரம்பமாக அமைந்துள்ளது.

இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைபடி ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தும் முனைப்புகளை மேற்கொள்ளக்கூடும் எனவும் அமைச்சர் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற் று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.