யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேற்றப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், அவர்கள் பாரிய சிக்கல்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.மீள்க்குடியேறும் குடும்பம் ஒன்றுக்கு 16 கூரைத்தகடுகளும், 5 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்பட்டது.
எனினும் குடியேற்றப்பட்டவர்களில் எவருக்கும் இதுவரை நிரந்த வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை. மீள்க்குடியேறிய குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிதியுதவியை வழங்கிய அரசசார்பற்ற நிறுவனம், தாம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், குறித்த நிதியுதவியை வழங்க முடியாதுள்ளதாக அறிவித்திருந்து. அதேவேளை மீள்க்குடியேற்றப்பட்டு ஆறுமாதங்கள் கடந்துள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் மீள்க்குடியேறிய மக்கள் வாழ்வதற்கு வழியின்றி பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.