Saturday, March 27, 2010

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் விடுதலை ஆகலாம்:அதிபர் என்.கீதாஞ்சலி.

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுபினர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான கூட்டமொன்று நேற்று மாலை 3.00 மணிக்கு வவுனியாவிலுள்ள சர்வதேசப் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. சர்வதேசப் பாடசாலையின் அதிபர் என்.கீதாஞ்சலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகளுக்கான வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி கலந்துகொண்டு, முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட உள்ளார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

எதிர்வரும் ஏப்பிரல் ஐந்தாம் நாளுக்கு முன்னர் உடல் உறுப்பிழந்த ஆண், பெண் முன்னாள் போராளிகளுள் 99 சதவீதமானோர் விடுவிக்கப்படுவர். அதே வேளை � பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுவந்த முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்பட உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசப் பாடசாலையின் அதிபரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிக்கான இணைப்பாளருமான என். கீதாஞ்சலி இந்தக் கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தார். இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய என்.கீதாஞ்சலி � தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விடுக்கப்படும் வரைக்கும் அவர்களது விடுதலைக்காகத் தான் தொடர்ந்து பாடுபடப்போவதாகக் குறிப்பிட்டார்.

வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து ஏற்கெனவே பலர் விடுவிக்கப்படுவதற்குக் காரணமாய் இருந்த கீதாஞ்சலியின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களென 1500 க்கும் அதிகமான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வவுனியா தடுப்பு முகாம்களிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட சிலரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர். இந்த நிகழ்வின் போது � வவுனியா அந்தணர் ஒன்றியத் தலைவர், மதபோதகர் தமிழ்ச் செல்வன், வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் வவுனியாலுள்ள பௌத்த விகாரையின் பிரதான குரு ஆகியோரும் உரையாற்றினர்.

ஆனாலும், இது வெறுமனே, தேர்தலை இலக்காக வைத்து வாக்கு வேட்டை ஆடுவதற்கான ஒரு திட்டமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.