Saturday, March 27, 2010

சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் குறித்த அறிக்கை:- தமிழ் இளையோர் அமைப்பு.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலில் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் தவறாது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து உங்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளை தேர்வுசெய்யுமாறு வேண்டுகின்றோம். இவ்வாறு சுவிஸ் இளையோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ்
ஊடக அறிக்கை

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய உறவுகள் அனைவருக்கும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் விடுதலை வணக்கத்தை தெருவித்துக் கொள்கிறோம். எதிர்வரும் 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான பிரதிநிதிகளுக்கான தேர்தல் சுவிஸின் அனைத்துப் பிராந்தியங்களிலும் நாடாத்தப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின் உலகத் தமிழினம் சனநாயக வழிமுறையில், அவர்கள் வாழும் நாடுகளில், அவர்ளுக்கான அரசியல் உயர்பீடங்களை உருவாக்கி தமிழீழ இலட்சியப் பாதையில் எழுச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் பயணிக்கத் தயாராகும் நேரமிது.

அதற்கு அடித்தளமாக நிறுவப்படும் சுவிஸ் ஈழத்தமிழர் அவையை சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு வாழ்த்தி நிற்கும் சமபொழுதில் தமிழீழம் நோக்கியதும் தமிழர்களின் உயர்வை நோக்கியதுமான பாதையில் ஈழத்தமிழர் அவைiயுடன் இறுகக் கரம் பற்றிக்கொள்கிறோம்.

இதேவேளை, நடைபெறவிருக்கும் மேற்படி சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலில் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் தவறாது வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து உங்கள் மாநிலங்ளின் பிரதிநிதிகளை தேர்வுசெய்யுமாறு வேண்டுகின்றோம்.

எமது தாயக அரசுக் கட்டுமானத்தை அழித்து புலம்பெயர் தமிழர்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து ஏகாதிபத்தயத்தின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிரிகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் மக்கள்துணைகொண்டு தடுக்கப்பட்டு, தாயகத்திலும் உலகெல்லாம் வாழும் தமிழினத்தினதும் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இறைமைகொண்ட தாயக விடுதலை ஒன்றே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழினத்தினது ஒரே முடிவு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள இன்றைய நிலையே எமது எதிரிகளுக்குச் சவாலாகவும் தமிழினத்திற்கு நம்பிக்கை வளர்ப்பதாகவும் இருக்கின்றது.

வட்டுக்கோட்டைத்தீர்மானம், 1977 அதற்கான மக்கள் ஆணை, அதைமீள்வலியுறுத்தி சர்வதேசமெங்கும் மக்கள் ஆணை, அடுத்து அதற்கான மக்கள் அவைகள் என்று விடுதலைக்கான மக்கள் போராட்டத்தின் பரிநாம வளர்ச்சிப் பாதையில் தமிழினம் வெற்றிபெற்றே தீரும் என்று உறுதியாக நம்புவோம்.

உலகால் மறுக்கமுடியாத ஒரு தேசிய இனத்தின் உரிமைக்காக இந்த மக்கள் அவையை, உறுதியான கொள்கைப் பற்றுடைய, அர்ப்பணிப்பும் ஆற்றலுமுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது எதிர்காலச் செயற்பாடுகளுக்கான அங்கீரத்தை வழங்குமாறு உங்களை அன்பாக வேண்டிநிற்கின்றோம்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.